தேடல் கலை இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மறைந்த கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலியின் நினைவுரையும், அவர் பற்றிய நூல் வெளியீடும் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (7) காலை 9.30 மணிக்கு கிண்ணியா அல் அதான் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முகம்மது முஸ்இல் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது,கலாபூஷணம் அ.கௌரிதாசனின் கவிஞர் அலி பற்றிய சிறப்புரை ஒன்றும் இடம்பெறவுள்ளது.
மேலும் அ.கௌரிதாசன் எழுதிய கவிஞர் அலி பற்றிய நினைவுக்குறிப்பு நூல் ஒன்றும் இவ்வைபவத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், மர்ஹூம் அலியின் குடும்பத்தினர் இவ்பைவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுகாதார வழிகாட்டலுக்கேற்ப நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment