அண்மையில் அல் குர்ஆன் முழுவதையும் தனது 14 வயதில் மனனம் செய்து அல் ஹாபிழ் பட்டம் பெற்று வெளியான தியாவட்டவான் தாறுஸ்ஸலாம் அறபுக்கல்லூரி மாணவன் ஏ.பி.எம்.ஹஸ்மீருக்கு பரிசில்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வு தியாவட்டவான் அல் ரஷாத் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று 26.02.2021 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஹாலீத் பின் வலீத் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இப்பிரதேசத்தில் புதிதாக உருவாக்கம் பெற்ற குறித்த விளையாட்டுக்கழகம் தனது முதற்கட்டப்பணியாக இக்கெளரவிப்பு நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக உதயமான இக்கழகத்திற்கு போதுமான விளையாட்டுபகரணங்கள் இல்லாத நிலையிலும்இ பின்தங்கிய கிராமத்திலிருந்து மிக இளவயதில் அல் குர்ஆன் முழுவதையும் மனனமிட்டு ஹாபிழாக பட்டம் பெற்ற குறித்த மாணவனை ஊக்குவிக்கும் வகையில் கெளரவித்தமை பாராட்டுக்குரியது.
குறித்த கழகம் விளையாட்டுடன் மட்டும் நின்று விடாது இவ்வாறான செயற்பாடுகளையும் பிரதேசத்தில் பொதுவான ஏனைய விடயங்களிலும் முன்னின்று செயற்படுவது வரவேற்கத்தக்கது.
விளையாட்டுக்கழகத் தலைவர் எம்.ஐ.வஷான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்இ ஹாலீத் பின் வலீத் ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் எம்.பெளஸ்தீன் உரையாற்றுகையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அல் ரஷாத் விளையாட்டுக்கழகத்திற்கும் அதன் தலைவர் எம்.ஐ.வஷான் மற்றும் கழக அங்கத்தவர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு கழகத்தின் வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாகிகள்இ பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் மாணவனின் பெற்றோர் உறவினர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment