கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை 206B கிராம சேவகர் பிரிவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலும், அடையாளங் காணப்பட்ட பொருட்களை அகற்றுதலும் பணிகள் கிராம உத்தியோகத்தர் ஜனாபா ஜெஸ்மிலா பானு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.எம்.எஸ்.இஸ்மாயில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாபா எப்.முஜீபா, வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.எல்.லியாப்தீன் JP மற்றும் இக்பால் சனசமூக நிலையத்தின் செயளாலர் ஏ.எம்.சுபியான், உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment