கொழும்புக்குள் மீண்டும் பயமுறுத்தும் கொரோனா!

J.f.காமிலா பேகம்-

நாட்டில் கடந்த 30 மணிநேரத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று முன்தினம் அடையாளங் காணப்பட்ட 711 கொரோனா தொற்றாளர்களுள் 236 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் கொம்பெனித்தெரு வெள்ளவத்தை புறக்கோட்டை மருதானை மட்டக்குளி தெஹிவளை கிராண்ட்பாஸ் நாரஹேன்பிட்டி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் நேற்று முன்தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 93 பேரும் காலி மாவட்டத்தில் 63 பேரும் கண்டி மாவட்டத்தில் 60 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 74 பேரும் பதுளையில் 53 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேரும் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனையவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி விடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 59 ஆயிரத்து 882 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதுடன் இதுவரை 332 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 91 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :