திருகோணமலை மாவட்டத்தின் தற்போது நெல் அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கந்தளாய், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம்,சூரியபுர,வட்டுக்கச்சி மற்றும் ஜயந்திபுர போன்ற பகுதிகளில் அறுவடை செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் கந்தளாய் குளத்தில் வான் கதவுகள் திறந்மையால் அறுவடைக்கு தயாராக இருந்த பத்து ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைகள் அழிவடைந்துள்ளதாகவும்,தற்போது ஒரு ஏக்கருக்கு இருபது மூடைகள் தான் விளைச்சல் கிடைப்பதாகவும்,மூன்று ஏக்கருக்கு அறுபத்தைந்து மூடைகள் தான் அறுவடைகள் கிடைப்பதாகவும் இம்முறை விளைச்சல்கள் மழையாலும்,வான்கதவுகள் திறப்பாலும் குறைவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று நெல் கொள்வனவிலும் குறைந்த விளையிலே விவசாயிகளிடமிருந்து அறவிடுகின்றார்கள்.
வேளாண்மை அறுவடை செய்யும் போது ஒரு விளையும்,நெல் கொள்வனவு செய்யும் போது மற்றொரு விளையுமாக நுகர்வோர் பெற்றுக்கொள்கின்றார்கள். அரசாங்கம் தீர்க்கமான விளையொன்றினை தீர்மானித்து விவசாயிகளை நட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment