கல்முனையில் விசேட துஆ பிராத்தனை ஹக்கீம், ஹரீஸ் உட்பட பலரும் பங்கேற்பு.



நூருள் ஹுதா உமர்-
ல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்தியத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.யூ. தாஹா செய்னுதீன் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார். அதற்கமைய கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் அவருக்குறிய ஜனாஸா தொழுகை இன்று (07) மதியம் 01 மணியளவில் இடம்பெற்றது

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஸாரிக் காரியப்பரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஜனாஸா தொழுகையில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எம். ஜெமீல், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை சட்டத்தரணிகள் ,சங்க முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்துறை சேவையில் 50 வருடங்களை பூர்த்தி செய்தமைக்காக சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்னாரை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னாரின் நினைவாகவும், நாட்டின் சுபிட்சம் வேண்டியும் விசேட துஆ பிராத்தனையும் இங்கு நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :