கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னிட்டு அது பற்றிய தெளிவூட்டல்களை தெளிவுபடுத்தவும் அங்குரார்ப்பண நிகழ்வொன்றும் இடம் பெற்றது.
இது தொடர்பில் குறித்த ஊடக சந்திப்பானது கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று (06) மாலை இடம் பெற்றது. இவ் உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான நிதி அனுசரனையை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வழங்கியுள்ளார். இதன் போது பங்கு பற்றும் கழக உறுப்பினர்கள், சம்பியன் அணிக்கான கிண்ணம் ,இலச்சினை உட்பட பலதும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி,குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத்,பிரதம பொலிஸ் பரிசோதகர் தமீம் உட்பட அல் அக்ஸா கல்லூரியின் முன்னால் அதிபர் பாறுக், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :