இலங்கை கடற்படையினருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 18ஆம் திகதி இரவு இந்திய மீனவர்கள் பயணித்த படகு இலங்கை கடற்படையினரின் கப்பலில் மோதியதில் 4 மீனவர்கள் பலியாகினார்கள்.
இந்நிலையில் 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகளை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 கோடியை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கையும் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெய் சுகின் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
0 comments :
Post a Comment