ஆசிரியர் ஜெனிட்டனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இரங்கலுரையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிக்குடி அதிபர் சபேஸ்குமார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , களுவாஞ்சிக்குடி ஆரம்ப பிரிவில் ஆசிரியராக கடமையாற்றிய பொலன் பிரான்சிஸ் ஜெனிட்டனின் அகால மறைவையொட்டி திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட காலைக்கூட்டத்தில் இரங்கல் உரையாற்றிய பாடசாலை முதல்வர் சபேஸ்குமார் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
ஆசிரியர் அமரர் ஜெனிட்டனின் திடீர் மறைவானது உண்மையிலேயே நினைத்து பார்க்க முடியாத ஒரு விடயமாகும்.இவ் ஆசிரியர் தற்போது கூட என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றார்.பாடசாலையின் சகல விடயங்களிலும் முன் மாதிரியான வினைத்திறன் உள்ள ஆசிரியராக திகழ்ந்துள்ளதுடன் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன்புரி விடயங்களிலும் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தவர்.
அன்னாரது திடீர் மறைவு பாடசாலைக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் கல்வி சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
பெரிய கல்லாறை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார் ஓய்வுபெற்ற அதிபர் போலன் பிரான்சிஸ் , ஓய்வுபெற்ற உதவி அதிபர் கோகுலம் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வருமாவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பாடசாலை பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று தெரிவித்ததுடன் அன்னாருக்காக பாடசாலை சமூகம் ஒரு நிமிட நேரம் மெளன அஞ்சலியும் செலுத்தினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :