திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அலஸ் தோட்டம் இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்



எப்.முபாரக்-
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அலஸ் தோட்டம் இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டம் இன்று(4) ஆரம்பகியுள்ளது.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என கேள்வி எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கணவர் பிள்ளைகளை இழந்து அவர்களுக்கான தீர்வு இன்னும் கிடைக்காத நிலையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது இதனை நாங்கள் தொழுகின்றோம்.

எமக்கு நீதி கட்டாயம் தேவை எமக்கு நீதி வழங்க விட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒரு சட்டமும் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டமும் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :