கத்தார் நாட்டுக்கு பயணிப்போர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்



மினுவாங்கொடை நிருபர்-
லங்கையிலிருந்து கத்தார் நோக்கி வேலை நிமிர்த்தம் பயணிக்க இருப்பவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி, விமான நிலைய பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்பிரகாரம், 1. PCR Test (Negative) - (பீ.சீ.ஆர். பரிசோதனை அறிக்கை),
2. Exceptional Entry Permit - (உள் நுளைவதற்கான அனுமதி),
3. Confirmed Air Ticket - (உறுதியளிக்கப்பட்ட விமானச் சீட்டு),
4. Hotel Booking for Quarantine - (அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் பதிவு),
5. Filled Consent Form - (அனுமதிப் பத்திரம்) ஆகியவற்றைப் பயணாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் பீ.சீ.ஆர். பரிசோதனைக்காக அனுமதியளிக்கப்பட்ட,
1. Nawaloka Hospital - நவலோக்க வைத்தியசாலை, 2. Lanka Hospital - லங்கா வைத்தியசாலை,
3. Asiri Surgical Hospital - ஆசிரி வைத்தியசாலை,
4. Durdans Hospital - டர்டன்ஸ் வைத்தியசாலை ஆகியவற்றில் ஏதாவதொரு வைத்தியசாலையின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பீ.சீ.ஆர். மேற்கொள்ளும் பயணாளிகள், Departure தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பீ.சீ.ஆர். பரிசோதனக்கான மாதிரியை (Sample) கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால், 24 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அறிக்கை (Result) கிடைக்கும்.
பயணாளிகள் நினைப்பது போன்று, பீ.சீ.ஆர். பரிசோதனை சம்பந்தமாக பயப்பட வேண்டிய அவசியமில்லை. மூக்கினுள் பின் சுவர் வரைக்கும் அதை நுழைய வைப்பார்கள் என்பதெல்லாம் வெறும் வதந்தியே.
வெறுமனே 1.5 அங்குலம் வரைக்கும் மாத்திரமே சிறிதாக நுழைக்கப்படும்.
இதேவேளை, கட்டாயமாக பீ.சீ.ஆர். அறிக்கையின் பிரதியொன்றை தம்மிடம் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.
அடுத்து, கட்டாயமாக Online Check in ஆகிக்கொள்வதும் மிகவும் சிறந்தது.
இது தவிர, 5 அல்லது 6 மணித்தியாலங்களுக்கு முன்னரே விமான நிலையம் செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. வழமைபோல் 3 மணித்தியால இடைவெளி வைத்துச் சென்றால் போதுமானது.
விமான நிலையத்தில் வழமைக்கு மாறாக வேறெந்த மாற்றமுமில்லை என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயணிகள், முகக்கவசம் (Mask, Face Protection, Social Distance) அணிந்து, ஒரு ஆசனம் விட்டு ஒரு ஆசனத்தில் அமர முடியும்.
இதனையடுத்து, கத்தார் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதன் பின்னர்,
1.
பயணாளி்களிடம் கத்தார் நாட்டு சிம் அட்டை இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உடனே அவ்விடத்தில் வாங்கமுடியும் (QR. 35),
2. EHTERAZ ஆப் இனை மொபைலில் பதிவிறக்கி setup செய்துகொள்ள வேண்டும்.
3. பயணாளிகளின் EHTERAZ Check பண்ணப்படும்.
4. Entry Permit பரிசோதிக்கப்பட்டு அதில் Red Label ஒட்டப்படும். (High risk country)
5. அதன்பின், வழமைபோல் Imigration, வழமைபோல் Baggage Collection, அதன்பின் நேரடியாக Hotel Booking Counter இல் பயணி்களுக்கான ஹோட்டல் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாகனத்தில் அனுப்பி வைக்கப்படும்.
நண்பர்களோ, உறவினர்களோ பயணாளிகளைப் பார்க்கவோ அல்லது பயணாளிகளிடமுள்ள பொதிகளைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது. இது வழமைக்கு மாறான ஒரு Exit வழியாக இருக்கும்.
பயணாளி்கள் ஹோட்டல் சொல்லும் வாகனத்தில் கூடுதலாக 2 பேர் மாத்திரமே கொண்டு செல்லப்படும்.
ஹோட்டலில் பயணாளிகளின் தரவுகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களுக்கான அறை வழங்கப்படும். அதிலிருந்து அவர்கள் வெளியே செல்ல முடியாது.
சரியாக 5 ஆவது நாள் மீண்டும் பயணாளி்களுக்கு ஒரு பீ.சீ.ஆர். எடுக்கப்படும். 6 ஆவது நாள் அறிக்கை வரும். அதுவும் Negative என்றால், 7 ஆவது நாள் Home Quarantine form நிரப்பி கையொப்பம் வைத்துவிட்டு அவர்களின் சொந்தச் செலவில் அவர்கள் வீடு அல்லது தங்குமிடங்களுக்குத் திரும்ப முடியும். அதன் பின்னர், மீண்டும் அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :