ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடனான கொவிற் கதைகள் நூல் சர்வோதயத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் நேற்று(13) சனிக்கிழமை மாலை இது வெளியிடப்பட்டது.
10 மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற கதைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 25 கதைகள் இதில் அடங்குகின்றது.
சர்வோதயத்தின் உபதலைவரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான வேல்முருகு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசோதயம் பிரிவின் தலைவர் எரங்கே நூலை வெளியிட்டு வைத்தார்.
முதல் பிரதியை திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எம்.அனஸ் பெற்றுக்கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாக முதல்வர் எஸ்.கனகசிங்கம் சிறப்புரை ஆற்றினார்.
0 comments :
Post a Comment