தென் கிழக்கு பல்கலையின் ஐந்தாவது உபவேந்தர் யார்?



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் இன்று (09) செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணி வரையான இறுதி நேரம் வரை 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1995 ஆம் ஆண்டு  மே 15 ஆம் திகதி இலங்கையின் பத்தாவது சுயாதீன பல்கலைக்கழகமாக பிரகடனப்படுத்தப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், முஸ்லிம் காங்கிரசின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். 
குறித்த பல்கலைக்கழகத்தின் ஐந்தாவதாக உபவேந்தர் கதிரையில் அமர முன்னாள் உபவேந்தர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட 11 பிரபலங்கள் களத்தில் குதித்துள்ளன.
போட்டியாளர்களாக இதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், பேராசிரியர் ஏ.எல். அப்துர் ரவூப், பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பேராசிரியர் ஏ.எம். முஸாதீக், முகாமைத்துவ பீடத்திலிருந்து பேராசிரியர் எம்.பீ.எம். இஸ்மாயில் போன்றோருடன்  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம், கொழும்பு பல்கலைக்கழக நிதிப் போராசிரியர் ஏ.ஏ.அஸீஸ், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி அத்துடன் மலேசியவிலுள்ள மலாயா பல்கலைக்கத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இஸ்மத் றம்ஸி ஆகியோரும் இறங்கியுள்ள அதேவேளை பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :