இச்சபையில் இன்று 11.02.2021 நடைபெற்ற விசேட கூட்டத்தில் புதிய தவிசாளராக எம்எஸ்எம். நழீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தவிசாளர் தெரிவுக்கூட்டத்திற்கு எதிரணியினர் எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் தவிசாளர் தெரிவு நடைபெற்றது. மாகாண மற்றும் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
இச்சபையின் 17 உறுப்பினர்களில் பதினொரு உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்கு சமுகமளித்த நிலையில் தவிசாளர் தெரிவின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் எம்எஸ். சுபைர் இங்கு எம்எஸ்எம். நழீமின் பெயரை முன்மொழிந்தார். அதேகட்சியைச் சேர்ந்த உபதவிசாளர் எம்எல். றெபு பாசம் அதனை வழிமொழிந்தார். இதையடுத்து போட்டியின்றி தவிசாளர் தெரிவு நிறைவுற்றது.
முன்னாள் தவிசாளர் கடந்த வருடம் சபையில் சமர்ப்பித்த இவ்வாண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சபையின் அங்கீகாரத்தைப் பெறாததனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட்தையடுத்து புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
புதிய தவிசாளர் எம்எஸ்எம். நழீம் ஏறாவூர் உள்ளுராட்சி மன்றத்தின் வரலாற்றில் இளம் தவிசாளராக காணப்படுகிறார். இவர் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மற்றும் மாவனெல்லை ஸாஹிறா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவராவார். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இவரது தெரிவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
இங்கு புதிய தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்- இச்சபையினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் எதனையும் சுயதேவைக்காக பெற்றுக்கொள்ள மாட்டேன். அத்துடன் இச்சபையின் வாகனங்களைப் பயன்படுத்தவே மாட்டேன் என்று சத்தியம் செய்ததுடன் இப்பிரதேசத்திற்கு அரசியல்வாதிகளினால் கொண்டுவரப்படும் எந்தவொரு அபிவிருத்தித்திட்டத்திற்கும் தடைக்கல்லாக இருக்காது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் என்றுஉறுதியளித்தார்.

0 comments :
Post a Comment