அரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா அஷ்சரியன் சூப்பர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(6) மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
சஜித் பிரேமதாசவின் ஆட்சி அதிகாரம்வருவதற்கு கூடிய காலம் இல்லை அவ்வாறு வருகின்ற போது இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் மாவட்டத்தின் ஆபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சஜித் பிரேமதாச என்னையும் ஒரு இளைஞனாக கருதி கட்சியின் உதவி செயலாளராக நியமித்துள்ளார்.
நாம் கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் பல இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்களையும் கட்சி பேதம் பாராமல் வழங்கியுள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment