நிந்தவூரைச் சேர்ந்த Dr.சலாஹுதீன் புஹாரி அகமட் முஹம்மட் முஜாஹித் சிறுநீரக விஷேட வைத்தியத் துறை (Nephrologist) நிபுணர்களுக்கான வெளிநாட்டு பயிற்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு இம்மாதம் பயணமாகின்றார். இப்பயிற்சியின் பின்னர் Dr.முஜாஹித் நமது பிராந்தியத்தில் முதலாவது சிறுநீரக வைத்தியத்துறை நிபுணராக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இவர் தனது ஆரம்பக்கல்வியை நிந்தவூர அல் மதீனா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் கற்றதுடன் மருத்துவத்துறையினை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில. கற்று 2011இல் பட்டம் பெற்றதுடன்
2012-2013காலப்பகுதியில் சிறி ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையிலும் 2014-2015 காலப்பகுதியில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையிலும் கடமையாற்றினார்.
இதன்பின் 2015 இல் பொது வைத்தியத்துறையினர்களிக்கான தேர்வுப்பரட்சையில் சித்தியெய்தியதுடன் பட்டப்பின் வைத்தியாராக தரம் பெற்றதுடன் 2018 இல் சிறுநீரக வைத்தியத்துறையை தெரிவுசெய்து 2020 இல் உள்நாட்டு பயற்சியையும் பூர்த்தி செய்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்(National Hospital) கடமையாற்றுவதுடன் இம்மாத இறுதியில் வெளிநாட்டு
பயிற்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமாகின்றார்.
டாக்டர் முஜாஹித் பொறியியலாளர் புஹாரி மற்றும் ஜனூபா புஹாரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும் சஞ்சிதா ரஷீடின் கணவரும் ஆவார். அவரது பயிற்சி சிறப்புற பூர்த்தி பெற்று எமது பிராந்தியத்தில் முதலாவது சிறுநீரக வைத்திய நிபுணராக தடம் பதிக்க வாழ்த்துகிறோம்

0 comments :
Post a Comment