கட்டாய ஜனாஸா எரிப்பு ! அரசின் திட்டமிட்ட அராஜகம் !!மகா அமைப்பாளர் நதீர் விசனம்.

கொ
ரோனா - ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தில் , அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது - அராஜகத்தின் உச்சம்.

இவ்வாறு - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி அமைப்பாளரும் - தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளருமான சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார்.

190 நாடுகளில் அடக்கம் செய்யப்படும் போது , இலங்கை அரசு - ஜனாஸாவை எரிப்பதில் அதீத ஆர்வம் செலுத்திவருவது முஸ்லிம் சமுகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவது முதற்கொண்டு - பள்ளிவாசல்களை உடைத்து - ஹபாயாவில் கைவைத்து , இன்று முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் வந்திருக்கிறது என்றால் - நிச்சயமாக - இன்றைய அரசைப் போன்ற அராஜகம் கொண்ட அரசாங்கம் வேறு எங்குமே இருக்க முடியாது.

கொரோனாவை காரணம் - முடக்க நிலையை உருவாக்கி , வியாபார நிலையங்களை முக்கியமான தருணங்களில் மூடி அராஜகம் காட்டிய இந்த அரசு - பாரிய பொருளாதார வீழ்ச்சியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை வியாபார துறையில் ஈடுபாடு கொண்ட என்னால் உறுதியாக கூற முடியும்..

எமது - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் - ஆரம்பம் முதலே இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எதிர்த்து வருகின்றார்.. சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் - துணிச்சலான முறையில் இதற்கெதிராக குரல் கொடுத்தார். இதன் எதிரொலியாக - அரசின் , அராஜகம் நிறைந்த 20 வது திருத்தத்தை எதிர்த்தார்.

கட்டாய ஜனாஸா எரிப்பு - நிறுத்தப்படும் வரை தலைவர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் எமது எதிர்ப்பு கோஷம் தொடரும் என்றும் சித்திக் நதீர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :