கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ந.சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகளாக தெ.பிரசாந்தன், எஸ்.டனுஜன், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 25 வறிய மாணவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குறித்த பாடசாலையானது கல்குடா கல்வி வலயத்தில் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment