சாரணியத்தின் ஸ்தாபகர் "பேடன் பவல்" தினத்தையொட்டி இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய நேற்று அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் பல பாடசாலைகளில் மரம் நடுகை நிகழ்வு இடம் பெற்றது.
இச் செயற்திட்டத்தின் தலைவரும் உதவி மாவட்ட ஆணையாளருமான எப்.எப்.றிபாஸ் தலைமையில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளரும்,முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.எம்.ஹாசீம்,சம்மாந்துரை பிரதேச செயலாளரும்,சங்கத்தின் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா,மாவட்ட ஆணையாளர்,எஸ்.ரவீந்திரன்,உதவி ஆணையாளர்களான எஸ்.எல்.முனாஸ்,எம்.எச்.ஹம்மாத்,இபாம்,பதக்கங்களின் செயலாளர் ஜெயினூதீன்,ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நாட்டினர்.
இங்கு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எஸ் எல்.எம்.ஹனிபா ஒரு நாள் சாரணர் என்றும் சாரணர் அந்த விதிக்கமைய சாரணியம் நல்ல பன்புகளையும்,ஒழுக்க விழுமியங்களையும் கொண்ட ஒரு அமைப்பாகும் உலகத்தில் நூற்றுக்கணக்கான நாடுகளில் சாரணிய இயக்கம் உள்ளது.
இதன் ஸ்தாபகரான பேடன் பவலின் இன்றைய நினைவு நாளை உலகம் பூராகவும் கொண்டாடுகின்றனர் இலங்கை சாரணர் சங்கம் ஒரு லட்சம் மர நடுகையினை மாவட்ட ரீதியாக நாட்டபடுகின்றன.
எதிர் காலங்களில் நமது சாரணர் மாவட்டம் சாரணர்களின் தொகையை அதிகரிப்பதற்கும்,ஜனாதிபதி சாரணர்களை உருவாக்குவதற்கும் மாவட்ட தலைவராகிய நான் முழுமையாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட மத்திய மகா வித்தியாலயம்,அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம்,அறபா,அர்ஹம்.சின்னப் பாலமுனை அல் ஹிக்மா ஆகிய பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் மர நடுகைகள் தொடராக இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.
மேலும் சம்மாந்துரை,கல்முனை,திருக்கோவில் வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை,நாளை மறுதினங்களில் இவ் மர நடுகை நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது
0 comments :
Post a Comment