நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் பிரதேச செயலாளர் வீ.தவாராஜாவின் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்களை இன்று (04.02.2021) வியாழக்கிழமை நடாத்தியது.
பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் பல மர கன்றுகள் நடப்பட்டதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் வறியகுடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட என்பத்தைந்து (85) மாணவர்களுக்கு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச செயலக வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்களார் எ.சஜ்ஜாத், ஓட்டமாவடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரி ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் எஸ்.பி.சுதர்மன்ஸ்ரீ, காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் ஏ.பி.எம். அலியார் முன்னாள் அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment