இளைஞர்களை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு பாரிய நோயாக போதைப்பொருள் பாவனை ,மாறியுள்ளது. இப்போதை பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் பல வகையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தாலும், போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்வது சமூகத்தில் பாரிய சவாலாக மாறியுள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் வியாபாரிகளும் பாவனையாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுவதுடன், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.
சவாலாக மாறியுள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்குவதுடன், அதன் பின்விளைவுகள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏழு நிமிட காட்சிக்குள்ள “தோல்வி” கலீல் மீராலெப்பையின் கதையில் இர்பான் மீராலெப்பையின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்தள்ளது
இன்று சமூகத்தில் உரத்து பேசப்பட வேண்டிய இந்த சீரழிவை காட்சிப்படுத்தல் ஊடகத்தினூடாக கொண்டு வந்துள்ளமை பாராட்டுக்குரியது.
கதையாசிரியர் இர்பான் மீரா லெப்பை சுமார் ஏழு நிமிடங்களில் காமெராவுக்கு பல விடயங்களை துள்ளியமாக சொற்ப வளங்களைக் கொண்டு, பிரதேச இளைஞர்களூடாக கதையை அமைத்திருப்பது சிறப்பு.
போதைப்பாவனை என்றால் என்னவென்று அறியாத ஒரு இளைஞன் போதைப்பொருளுடன் அகப்பட்டு தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கின்ற நிலையை கதையாசிரியர் அழகாக சொல்லியிருக்கின்றார்.
அதனூடே கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் ஏற்படும் பாதிப்பையும் மறைமுக கருத்தாக பதிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. அதிக இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதற்கு நண்பர்களே காரணகர்த்தாவாக உள்ளதை துல்லியமான காட்சிப்படுத்தியுள்ளார்.
எமது நண்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும். நாம் எவ்வாறான நண்பர்களுடன் சேர வேண்டும்? யாரோடு சேரக்கூடாது என்பதை கதையாசிரியர் அழகாக சொல்கிறார்.
தனக்கு ஒரு தொழில் வாய்ப்புக்கிடைக்கும் என்ற பல கனவுகலோடு நேர்முகப் பரீட்சைக்குச்சென்று அதிலும் தெரிவாகி தனக்கு தொழில் கிடைத்த சந்தர்ப்பத்தில் போதைப்பொருளுடன் கைதாவதும் தண்டனை அனுபவிப்பதும் யதார்த்தத்தை சொல்லி நிற்கிறது.
குறித்த இளைஞர் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தாலும் அவரது கையில் போதைப்பொருள் இருந்தமையால் தண்டனையை அனுபவிக்கின்றார். சட்டத்தின் பார்வையில் குற்றவாளி என்பதனால் மீண்டும் தொழிலைப்பெற முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
போதைப்பொருள் பாவனை எவ்வாறான ஒரு சீர்கேடான நிலைக்கு ஒருவரை தள்ளும் என்பதனையும் கதையாசிரியர் அழகாக குறுகிய நேரத்தில் துள்ளியமாக சொல்லியிருக்கிறார். போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து எமது இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு நல்லதோர் கதையாக “தோல்வி” குறுந்திரைப்படம் அமைந்திருக்கிறதென்பது எனது கருத்தாகும்.</

0 comments :
Post a Comment