காரைதீவு மயானம் பட்டொளிவீசுகிறது!

வி.ரி.சகாதேவராஜா-

நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக்கிடந்த காரைதீவு மயானவீதி மின்விளக்கு பொருத்தப்பட்டு தற்போது பட்டொளிவீசுகிறது.

காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேற்கொண்ட பெருமுயற்சி காரணமாக இலங்கை மின்சாரசபை இம்மின்இணைப்புப்பணிகளை மேற்கொண்டது.
அதனை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.அச்சமயம் தவிசாளா ஜெயசிறில் உள்ளிட்ட பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் கே.ஜெயதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இம் மயான வீதியில் இரு ஆலயங்கள் திண்மக்கழிவு தரம்பிரிக்கும் கூடம் குடிமனைகள் என்பன அமைந்துள்ளன. இவ்வீதியை மக்கள் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக நிந்தவுர் தொடக்கம் கல்முனை வரை மூவினமக்கள் இரவுபக் பாராது சரளமாகச்சென்றுவருகின்ற பாதை இதுவாகும்.

இந்நிலையில் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாதது மக்கள் மத்தியில் பெரும் அசௌகரியத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

எனவே தவிசாளர் ஜெயசிறில் மேற்கொண்ட முயற்சியால் இன்று மக்கள் அச்சமின்றி பயணிக்கக்கூடியதாயுள்ளது. மேலும் மின்சாரத்தால் பிரேதத்தை எரியூட்டக்கூடிய இயந்திரம் பொருத்தவும் தற்போது இலகுவாகவுளளது.இதனையிட்டு மக்கள் தவிசாளருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.மேலும் காரைதீவு மயானத்தைச்சுற்றி மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக மதில் அமைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :