திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறையை எதிர்த்து திருகோணமலை நகரின் மத்தியில் மீனவர்கள் இன்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
டைனமைட் பாவனை, தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் ஆகிய தொடர்ந்தும் இடம்பெறுவதைக் கண்டித்தும் இதன்நிமித்தம் உரிய அதிகாரிகள் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்கின்றமை குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
அத்துடன் இச்சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு எதிராக இலங்கைக் கடலோரக் காவல் படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியன எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
சுமார் இறுநூறிக்கும் அதிகமான மீனவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
0 comments :
Post a Comment