சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் இரண்டாவது நாளாகவும் நேற்று (04) மாலை கிண்ணியாவை வந்தடைந்து பேரணியில் ஈடுபட்டார்கள் குறித்த எழுச்சிப் பேரணியானது மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் கிண்ணியா பீச் பூங்காவில் இருந்து கிண்ணியா கடல் மேல் பாலத்தை நோக்கியவாறு சென்றது.
பொத்துவிலிருந்து நேற்றுக் காலை ஆரம்பமான இந்தப் பேரணி, இன்று மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை கிண்ணியாவை வந்தடைந்தது பொத்துவில் தொடக்கம் பொழிகண்டி வரை குறித்த பேரணி இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை அபகரித்தல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்தக் கண்டனப் பேரணி நடைபெற்று வருகின்றது.
இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், ஜனாசாவை எரிக்காதே ,சிறுபான்மையினரின் உரிமைகளை பரிக்காதே,நல்லடக்கம் செய்ய அனுமதி தா, தமிழ் மொழியை நீ புறக்கணிக்காதே, மத உரிமைகளில் கை வைக்காதே, சிறுபான்மையினரின் நிலங்களை பரிக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் நடை பவணியாக சென்றார்கள்.
இவ் எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,இரா.சாணக்கியன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், முன்னால் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment