சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்க "நாம் இலங்கையர்" என இணைந்து வாழ்வோம்-மொஹமட் உவைஸ் மொஹமட் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி



மினுவாங்கொடை நிருபர்-
ரு நாட்டின் நாளைய தினத்தை நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் கழிப்பதற்கு, ஒருமித்த சமூகத்தை உருவாக்க வேண்டும். அதுவே நாம் நமது அடுத்த தலைமுறையினருக்காகச் செய்யும் மிகச் சிறந்த கைங்கரியமாகும் என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான மொஹமட் உவைஸ் மொஹமட், தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொவிட் தொற்றுப் பரவலினால், இலங்கை வாழ் சகல இன சமூகங்களும் தொழில் இன்றி, அன்றைய ஜீவனோபாய வழி முறைகளைக் கூடத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நாம் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். கொவிட்டினால் மக்கள் ஒரு வருட காலமாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு, அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னராகக் கிடைக்க வேண்டும் என, இன்றைய சுதந்திர தினத்தன்று பிரார்த்திப்போமாக. இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட முன் வருவோமாக.
அத்துடன், எங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ள, இன்றைய சுதந்திர தினத்தன்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொவிட் காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் அனைவருக்கும் ஆறுதல் கூறி, அவர்களின் துன்பங்களிலும் பங்கேற்று, அவர்களுக்கு எம்மால் இயலுமான உதவி ஒத்தாசைகளையும் இச்சந்தர்ப்பத்தில் புரிய வேண்டும்.
வருடா வருடம் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம் என்பதுடன் மாத்திரம் நின்று விடாமல், அதற்குப் பின்னணியில் பொதிந்துள்ளவற்றைப் பற்றியும் சிந்தனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அரும் பெரும் பாடுபட்டு உழைத்த நமது தேசிய வீரர்களின் பங்களிப்புக்களை, நாம் நன்றி உணர்வுடன் நினைவு கூர வேண்டிய நேரமிது. அத்துடன், எமது தாய் நாட்டை மீட்டெடுக்க, தம்முடைய உயிரையும் துச்சமென மதித்து, நாட்டுக்காக அர்ப்பணித்த செயல் வீரர்களுக்கு, இது மரியாதை செய்வதற்குமான நேரமுமாகும்.
ஆகவே, சுதந்திரத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குவதற்காக, இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் "நாம் இலங்கையர்கள்" என்ற அபிலாஷைகளோடு ஒற்றுமை, அமைதி, சமாதானம், சந்தோஷம் பேணி, இத்தரணியில் இணைந்து வாழ முயற்சிப்போமாக!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :