திருகோணமலை மாவட்ட லயன்ஸ் கிளப்பின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று(28) திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் கண்பரிசோதனை, இதயம், உடற்பரிசோதனை, மார்பு,மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடிகள் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் நாலா புரத்திலிருந்தும் ஐறூறிற்கும் மேற்பட்ட பொது மக்கள் வருகை தந்து நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளுக்கேற்ப இந்நடமாடும் சேவை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட லயன்ஸ் கிளப்பின் ஆளுனர்,பல்வேறு தரங்களிலுமுள்ள லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment