வேள்ட்விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினூடாக வாகரை பிரதேசத்தில் பல்வேறு செயற்திட்டங்கள்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வேள்ட்விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினூடாக வாகரை பிரதேசத்தில் வாழ்வாதார உள்ளீடுகள், வாய்க்கால் கட்டுமாணப் பணிக்கான அடிக்கல் வைக்கும் மற்றும் முன்பள்ளி பாடசாலைகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணம் வழங்கும் நிகழ்வுகளானது வேள்ட்விஷன் வாகரை மற்றும் வாழைச்சேனை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் முகாமையாளார் திரு. கொன்சேகா அனுராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் சு.கரன், கோரளைப்பற்று வடக்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், மட்டக்களப்பு மாவட்ட நன்னீர் மீன்பிடி பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான், மட்டக்களப்பு மாவட்ட கமநல அமைப்பு ஆணையாளர் தி.nஐகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் சிவசண்முகநாதன், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வேள்ட்விஷன் ஊழியர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள், மீனவர் அமைப்பு நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கு ரூபா 4.8 மில்லியன் பெறுமதியான மீன்பிடி வள்ளம், ஆடு, தையல் இயந்திரம், நீர் பம்பி, முள்ளுக்கம்பி, வட்டை உள்ளீடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் வாகரை குஞ்சன்கல்குளம்; 100 மீட்டர் வாய்கால் கட்டுமான வேலைக்கான அடிக்கல் அதிகள் ஊடாக நடப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்திட்டம் ரூபா 1.4 மில்லியனில் செயற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் இப்பகுதி விவசாயிகள் தொடர்சியாக வேளாண்மை செய்கையினை மேற்கொள்ள முடியும்.

மேலும் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட 25 முன்பள்ளி பாடசாலைகளுக்கான குறைந்தபட்ச தரம் தொடர்பான செயற்பாட்டிற்கு அமைவாக கற்றல் கற்பித்தல் உபகரணம் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாவட்ட கால்நடை திணைக்களத்திற்கான ஊழுஏஐனு 19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமான உள்ளீடுகளும் வேள்ட்விஷன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :