நாம் வாழ்ந்த மண்ணை மீட்டுத்தாருங்கள்! இல்லையென்றால் பொத்துவில் DS Office முன்னால் உயிரைவிடவுள்ளோம்.!

வி.ரி.சகாதேவராஜா-

தாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று(14)ஞாயிற்றுக்கிழமை அவர்கள் 906வது நாளாக போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில் அங்கு வழக்கமாகச்சென்று உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகஉணர்வாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு கூறினர்.

போராட்டக்குழுவின் தலைவி றங்கத்தனா உறுப்பினர் ராசா ஆகியோர் மிகவும் ஆக்ரோசமாக ஆனால் உருக்கமாக தமது போராட்டம் இவ்வாறு 900நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் இன்னுமொரு அந்நியசக்தி புகுந்து குழப்பத்தலைப்பட்டுள்ளதையும் விளக்கமாகக்கூறினர்.

வெகுவிரைவில் பொத்துவில் பிரதேசசெயலாளரிடம் ஓரு பேரணியை நடாத்திச்சென்று இறுதி மகஜரைக்கையளித்து அந்தஇடத்திலேயே உயிரைவிடவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எத்தனையோ ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அரசியலாளர்கள் வந்துசென்றனர்.பல உறுதிமொழிகiளையும் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை எதுவுமே ஆகவில்லை. நாம் தமிழர்கள் அநாதைகளா? என்று அழாக்குறையாகக்கேட்டனர்.

பதிலளித்த தவிசாளர் ஜெயசிறில் :
போராட்டங்கள் அதுவும் தமிழர் போராட்டங்கள் இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது ஒன்றும் இந்நாட்டில் புதினமல்ல. ஆனால் இறுதிவரை நீங்கள் இங்கிருந்து போராடுவதைப் பாராட்டுகிறேன். உங்களுக்குள்ளே உள்ள ஒற்றுமையின்மையே இதுவரை இழுபடுவதற்கு காரணமென்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

எனவே மனதை தளரவிடாமல் போராடுங்கள். நாம்பிறந்த மண்ணில் அந்நியருக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.எம்மிடையே பல எட்டப்பர்கள் இருப்பார்கள். அதற்கு இடமளிக்கவேண்டாம். உங்கள்பேரணிக்கு உதவுவேன் என்றார்.

வரலாறு.
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ஆம் கட்டை ஊறணி எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணி மீட்புப்போராட்டம் தொடங்கி நேற்றுடன் 906ஆவது நாளாகிறது. அவர்கள் கடந்த 2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 30வருடங்களாக அங்கு வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.

 அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும். தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.

குறித்த கனகர்கிராம மக்களின் 225ஏக்கர் காணி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையின்பேரில் நிலஅளவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
836நாள் போராட்டத்தில் கருணா அம்மான் சமுகமளித்து இக்காணியை வெகுவிரைவில் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.
இதற்கு என்னகாரணம்? அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? அல்லது தமிழ்த்தலைமைகளின் பொடுபோக்குத்தனமா? என்பதுபுரியாமலுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :