.கத்தாரிலுள்ள கல்குடா சகோதரர்களிடையே நல்லுறவு, சகோதரத்துவத்தை வளர்க்கும் நோக்கிலும் கத்தாரின் தேசிய விளையாட்டு தினத்தை கெளரவிக்குமுகமாகவும் கத்தார் - கல்குடா சமூக நிறுவனத்தின் (Institution Of Kalkudah Community-Qatar (IKCQ)) ஏற்பாட்டில் இன்று 26.02.2021ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணி IKCQ கிண்ணத்தை வென்று சம்பினானது.
19.02.2021, 26.02.2021 ஆகிய இரு தினங்களிலும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளிலும் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடிய பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணியினர் குறித்த வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.
இன்றைய இறுதிப்போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணியினரை எதிர்கொண்ட மீராவோடை அல் ஹிதாயா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணியினர் 6 ஓவர்களுக்கு 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 5 ஓவர் நிறைவல் 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்து கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில் கல்குடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கத்தாரில் இயங்கும் வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணி, மீராவோடை அல் ஹிதாயா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை அணி, கத்தார் -கல்குடா நலன்புரி அமைப்பின் அணி, கத்தார் - கோறளைப்பற்று மத்தி அபிவிருத்திச்சங்க அணி என ஆகிய ஐந்து அணிகள் பங்கு பற்றியிருந்தன.
0 comments :
Post a Comment