சம்மாந்துறை வலய நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாந்தரத்திற்கு பதவியுயர்வுபெற்றுள்ளார்.
மருதமுனையைச் சேர்ந்த ஜனாப் அமீர் 1984.12.27ஆம் திகதி ஆரம்பக்கல்வி ஆசிரியராக நியமனம்பெற்று, அனுராதபுரத்தில் முதல் சேவையை ஆரம்பித்தார். தொடர்ந்து மருதமுனை ஷம்ஸ் மத்தியகல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
2007இல் இலங்கை கல்வி நிருவாகசேவைப்பரீட்சையில் சித்தியடைந்து நிருவாகசேவை அதிகாரியாக கல்முனை, மட்டு.மத்தி வலயம் ஆகியவற்றில் கடமையாற்றி இறுதியாக சம்மாந்துறை வலயத்தில் பணியாற்றிவருகிறார்.
37வருடகால கல்விச்சேவையாற்றிய அவருக்கு, அரசசேவை ஆணைக்குழு 2019இலிருந்து முதலாந்தர கல்விநிருவாகசேவை அதிகாரியாக பதவியுயர்வை வழங்கியுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் 2021.03.22 ஆம் திகதிய தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெற்ற சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்)ஆக கடமையாற்றும் அமீர் அவர்களுக்கு சம்மாந்துறை வலய அதிபர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அதிபர் சங்க செயலாளர் யு.கே.நிஹால் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment