விபுலாநந்த சதுக்கத்தில் இடம்பெற்ற விபுலாநந்தரின் 129வது ஜனனதினம்

வி.ரி.சகாதேவராஜா-

லகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனன தினத்தையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இருவேறு பெரு விழாக்கள் கொட்டும்மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.

முதல் விழா காரைதீவு பிரதானவீதி விபுலாநந்த சதுக்கத்திலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலை முன்றலில் காரைதீவு பிரதேசசபை நடாத்துகின்ற 'வியத்தகு வித்தகர்' சுவாமி விபுலாநந்தர் பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் பட்டயப்பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம்(காரைதீவின் முதல் பெண் பொறியியலாளர்) கலந்து சிறப்பித்தார்.

கௌரவஅதிதிகளாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்க்பபட்டு புஸ்பாஞ்சில செலுத்திபஞ்சாராத்தி காட்டி வெள்ளைநிற மல்லிகையோ பாடி விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

தொடர்ந்து பிரதமஅதிதிக்கு பெருவரவேற்பளிக்கப்பட்டு சுவாமி தொடர்பான நினைவுரைகள் சிறப்புச்சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :