புரவலர் புத்தகப் பூங்காவின் இலவச வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் 40வது நூல் வெளியீடு கலைஞரும,; ஊடகவியலாளருமான ராதமாதமேத்தாவின் "உள்ளத்தில் வைப்போமா" என்ற நூலின் வெளியீடு கொழும்பு ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் 28.03.2021 ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் கலந்து சிறப்பித்ததோடு நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் கனேஸ் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ்மாஅதிபர் கே.பி.ஏ அரசரட்ணம் தலைமையுரையை நிகழ்த்தினார். தினகரன்,தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவின் கலை,கலாச்சார உஸ்த்தியோகத்தர் திருமதி கிரிஸ் ரோஸம் நூல்பற்றி ஆய்வுரைகளை நிகழ்த்தினார்கள்.
பொன்மலைச் செம்மல் தாஜ்மகான் நூலசிரியருக்கு பொன்னாடை போற்றி மாலை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்வின்போது புதிய அலை கலை வட்டத்தினால் இசை, நாடகம் நடனம்; ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய இளம் கலைஞர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவர்களது நிகழ்வுகளும் மேடை ஏற்பட்டது. ஏற்புரையை நூலாசிரியர் ராதா மேத்தா நிகழ்த்தினார்
இந் நிகழ்வில் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள். சமுகசேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment