இலங்கை முஸ்லீம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெ.தொன் பேரீத்தம் பழம் சவுதி அரேபியாவினால் வழங்கி வைப்பு



2021 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லீம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெ.தொன் பேரீத்தம் பழம் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் இம்முறை வழங்கப்பட்டுள்ளது.  அதனை 2021.03.16 ஆம் திகதி அன்று இலங்கையில் உள்ள  சவுதி தூதரக பிரதித் தூதுவர் கௌரவ றியாப் அல் ஷரீப் அவர்களினால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமரும் புத்தசாசனம்,கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் வைபவம் பிரதமர் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்றது.

அதனை பிரதமர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் அவர்களிடம்  கையளித்தார். இப் பேரீத்தம் பழங்கள் மிக விரைவில் நாடு பூராக உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடுகள் திணைக்களத்தினால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :