சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

எப்.முபாரக்-

தி
ருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நபர் வைத்திருந்த மோட்டார் குண்டை கிரைண்டர் மெசின் மூலமாக அறுத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோது குண்டு வெடித்துள்ளதாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சடலத்தினை உறவினர்களிடம் இன்றைய தினம்(20) கயளிக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :