உள்ளத்தில் வைப்போமா? கொழும்பில் நூல்வெளியீடு



லைஞர், பத்திரிகையாசிரியர், புதிய அலை கலை வட்ட நிறுவனர் போன்ற பல்வேறு தகமைகளைக் கொண்ட ராதாமேத்தாவின் முதல் நூலாக அவர் பத்திரிகைளில் எழுதி வெளிவந்த கலைத்துறை சார்ந்த கட்டுரைத்தெர்குப்பான 'உள்ளத்தில் வைப்போமா? என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி (போயா) அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

கொழும்பு -11 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகதிரேசன் மண்டபத்தில் நடை பெறவுள்ள இந்த நிகழ்வுக்குத் தலைமை ஏற்கிறார் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எ.அரசரட்ணம்.

இந்த நூலை தனது புரவலர் புத்தகப் பூங்காவின் 40ஆவது வெளியீடாக வெளி வரச் செய்துள்ள இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், இந்நிகழ்வின் பிரதம அதிதி யாக கலந்து சிறப்பிக்கின்றார்.

முதற்பிரதியை தொழில் அதிபரும், நகைச்சுவைக் கலைஞருமான எம். பிரேம்ராஜ் பெற்றுக்கொள்கிறார். இந்த நூலின் ஆய்வுரையை தொழில்அதிபரும், அறங்காவலரு மான கணேஷ் ஈசுவரனும் வாழ்த்துரையை தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தே. செந்தில்வேலவரும், நூல் ஆய்வுரையை கொழம்பு செயலாளர் செயலகத்தின் கலை,கலாசார உத்தியோகஸ்தர் திருமதி கிறிஸ்ரிரோஸூம் வழங்குகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2021 கலாசரப்போட்டியில் பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வினில் கௌரவ, சிறப்பு, கலை இலக்கியத்துறை, ஊடகத்துறை மற்றும் சமூக அரசியல்துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :