சம்மாந்துறைப்பற்று மேசன் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை சலாம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவடி இன்று (13) சிரமதானம் செய்யப்பட்டது.
இதன்போது சலாம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவடி வாளாகம் மரங்கள் மற்றும் பற்றைகள் வளர்ந்து காடாக காணப்பட்டதையடுத்து பற்றைக்காடுகள், புல்பூண்டுகள் வெட்டப்பட்டு தூப்புரவு செய்யப்பட்டது.
சம்மாந்துறைப்பற்று மேசன் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.வீ.ஹஸன் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சலாம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.பரீட், சம்மாந்துறைப்பற்று மேசன் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.சல்பியார் உப தலைவர் ஏ.ஜெஃபர் ஆலோசகர் எம்.சி.ஏ.றகீம் பெருளாளர் எஸ்.ரீ.அப்துல் சலாம், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment