காரைதீவு முதல் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வரையிலான 3. 4 கிலோ மீற்றர் கடற்கரை வீதிகளை காபட் வீதிகளாக புனரமைக்கின்ற வேலை திட்டம் இன்று (21.03.2021) சாஹிரா கல்லூரி சந்தியில் துவாப் பிரார்ததனையோடு அடிக்கல் நாட்டி ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தருமான றிஸ்லி முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் ஆசிர்வாதம், வழிகாட்டல், அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
ஆகியவற்றுடன் மேற்படி வீதிகள் காபட் வீதிகளாக புனரமைக்கின்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் hon. Wd. வீரசிங்க,
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் hon (Dr) திலக் ராஜபக்ஸ , கல்முனை மாநகர சபை முதல்வர் hon. Am.றகீப் (llb) , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் hon.
கிருஷ்ன பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்முகமாக வரவேற்புரையை நிகழ்த்திய றிஸ்லி முஸ்தபா கூறுகையில் , இந்த திட்டத்தை செயல்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கிய அலி சப்ரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து ,
இந்த திட்டம் மட்டுமில்லாமல் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் . அதிலும் முக்கியமாக இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக மயோன் லெஷர் மற்றும் ஸ்போர்ட் ஸ்குயார் எனும் பேட்மின்டன், புட்செல், கூடைப்பந்து ஆகிய உள்ளக மைதானங்களை அமைக்கும் செயல் திட்டம் மும்முரமாக செயற்படுத்தடுகின்றது. அதற்குறிய அனுமதிமதியும் கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் கூறுகையில் , நான் செல்வதை செய்பவன் செய்வதையே சொல்பவன் நான் மற்றவர்களைப் போல் பம்மாத்துக்காட்டுபவன் அல்ல, எமது சமூகம் அபிவிரித்யியை நோக்கிச் செல்லவேண்டும். உரிமை அரசியலை கைவிடவேண்டும் என்று தனது உறையை முடித்துக்கொண்டார்,
காரைதீவு பிரதேச தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை தனது உரையின் போது எமது மக்களுக்கு நன்மை பயக்கின்ற எந்த வேலை திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்லர், குறுகிய சுய இலாப கண்ணோட்டத்துடன் நாம் அவ்வாறான வேலை திட்டங்களை அணுகுவதும் இல்லை, எமது புரிதலின் அடிப்படையில் றிஸ்லி முஸ்தபா நல்ல நோக்கத்துடனேயே இவ்வேலை திட்டத்தை முன்னெடுக்கின்றார், இவருடைய தந்தையார்கூட தமிழ் மக்களுடன் மிக நன்றாக நேசமாக பழகியவர் என்றார். எவ்வாறான சந்தர்ப்பத்திலும் நாங்கள் இன மத பேதமின்றி றிஸ்லி முஸ்தபாவிற்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி தனது உறையை முடித்துக்கொண்டார்.
நிகழ்வில் அடுத்து அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தினால் மாலை அனுவித்து மற்றும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment