கல்கிசை கடற்கறையிா் பீச் ஹோட்டலில் இருந்து தெஹிவளை புகையிரத நிலையம் வரை மண் நிறப்ப திட்டம்!


அஷ்ரப் ஏ சமத்-

ல்கிசை கடற்கறையிா் பீச் ஹோட்டலில் இருந்து தெஹிவளை புகையிரத நிலையம் வரை 1500 கியுப் மண்களை நிரப்பி 100மீட்டர் அகலமும் 250 மீட்டா் நீளமும் கொண்ட 2 கி.மீட்டரை பரப்பில் கடல் மண் அரிப்பில் இருந்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடல் பாதுகாப்பு கரையோரம் சம்பந்தமான திணைக்களம் ஊடாக 110 மில்லியன் ருபாவினை இத்திட்டத்திற்காக எமது திணைக்களம் செலவழித்துள்ளது. என கடல் சாந்த பாதுகாப்பு கரையோரம் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் சுகத் யாலோகம தெரிவித்தாா்.

தகவல் திணைக்களம் ஊடாக ஊடகவியலாளா்களை அழைத்து வந்து அங்கு நடைபெற்றுள்ள அபிவிருத்திகளை உண்மை நிலைகளை பணிப்பாளா் சுகத் யாலோகம விளக்கிக் கூறினாா்.
அவா் தொடா்ந்து தகவல் தருகையில் -
இத் திட்டம் ஏற்கனவே 2017ல் திட்டமிடடப்பட்டிருந்தது . இத்திட்டத்தின் அபிவிருத்திக்கு தொடா்ந்து மேற்கொள்வதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எமது திணைக்களத்திற்கு அனுமதி அளித்திருந்தாா் அதற்கமைவாகவே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டன. இதனை ஊடகங்களில் வேறுவித்தமாக சில சூழலியாலளா்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் சேறுபூசுகின்றனா். அவ்வாறு எவ்வித உண்மைத்தன்மையும்மில்லை.


இத்திட்டத்தினை முன் எடுப்பதற்கும் இதனை உரிய சூழல் அதிகார சபை, மேலும் கடல் சம்பந்தப்பட்ட பல்கலைகழக பேராசிரியா்கள் ஆலோசனைகளைக் கொண்டு கடல் ச கடல் கறைஓரங்கள் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கடல் பாதுகாப்பு கரையோரத் திணைக்களத்திற்கு சகல அதிகாரங்களும் உண்டும். இங்கு மண்நிரப்புவதற்கு முன்னா் கடலிருந்து புகையிரத ஓடுபாதை வரை கடல் நீர் அறித்து இருந்தது அச்சமயத்தில் இருந்த சகல புகைப்படங்கள் உள்ளது. தற்பொழுது பொதுமக்கள் இதனை அழகாக சுவாசிப்பதற்கு அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்துடன் இதனை எங்களது பொறியியலாளாா்கள் மேலதிகச் செயலாளா் தலைமையில் இதனை அவதானித்தும் அறிக்கை சமா்பித்துள்ளோம். இதே போன்று கடலோர பல பிரதேசங்கள் எதிா்காலத்தில் சகல திட்டங்களும் உரிய சூழலியல் மற்றும் பல்களைக்கழக பேராசிரியா்கள் ஊடகாக ஆலோசிக்கப்பட்டு முன் எடுக்கப்படும்.


இலங்கையில் கடல்அறிப்பு வடகிழக்கிலும் மேல் தெற்கிலும் மே-செப்டம்பா் மாதங்களில் நடைபெறும். ஆனால் மேல் தெற்கு மாகாணங்களில் உள்ள கடல் பரப்புக்களிலேயே கடல் வேகமாக வந்து கடல் அறிப்பு நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :