சா.த.பரீட்சையை முன்னிட்டு காரைதீவில் டெங்குபுகை



வி.ரி.சகாதேவராஜா-
நாடளாவியரீதியில் நேற்று(1) ஆரம்பமாகிய க.பொ.த.சா.த பரீட்சையையொட்டி பரீட்சைநிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேச சுகாதாரத்துறையினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

காரைதீவுப்பிரதேசத்திலுள்ள 05 பரீட்சைநிலையங்களுக்கும் டெங்குத்தடுப்பு புகை விசிறப்பட்ட அதேவேளை கொரோனா தொற்றுநீக்கமும் செய்யப்பட்டுள்ளது.குறித்த பாடசாலைகளைச்சுற்றியுள்ள சூழலுக்கும் டெங்குத்தடுப்பு புகை விசிறப்பட்டது.

காரைதீவுப் பிரதேசசுகாதார வைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் கூறுகையில்: பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதுகாப்பாக பரீட்சை எழுதுவதை உறுதிப்படுத்தும்பொருட்டு டெங்கு கொரோனாத்தடுப்பு நடவடிக்கைகளை ஞாயிறன்று 5நிலையங்களிலும் மேற்கொண்டோம்.

எனினும் தொடர்ந்து அங்குள்ள சூழலை சுத்தமாகவைத்து பரீட்சைடைபெறும் சுறறாடலையும் பரீட்சார்த்திகளின் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்தவேண்டியது அங்குள்ள மேற்பார்வையாளர் அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :