சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த பெண்கள் சார்ந்த சுய தொழில் முயற்சி "சந்தை கண்காட்சியும், விற்பனையும் இன்று (03) காலை 9.00 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்
கிழக்கு ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், மற்றும் திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நுவான் கபில அத்துக்கோரள , மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் திருமதி ,ஆரியவதி கலப்பதி ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவற்றில் வீடுகளில் கையால் செய்யப்பட்ட பொருட்கள், நஞ்சற்ற பொருட்கள், மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பொருட்களை மலிவு விலையில் விற்கப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இநனை சமூக சேவைத் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபர் காரியாலயம் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தனர்.
0 comments :
Post a Comment