ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்ட நேர்முக பரீட்சை இன்று அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது
வெள்ளிக்கிழமை(12) மதியம் 2 மணியளவில் குறித்த வேலைவாய்ப்பு நேர்முக பரீட்சையில் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு வருகை தந்திருந்தனர்.இவ் வேலைவாய்ப்பிற்கான நேர்முக தேர்வினை சீராக மேற்கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் வழிகாட்டலில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இன்று மாத்திரம் ஏறத்தாழ 15 விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
மேலும் குறித்த வேலைவாய்ப்பிற்கு நாவிதன்வெளி, அன்னமலை ,சொறிக்கல்முனை ,சாளம்பைக்கேணி ,மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நேர்முக பரீட்சையில் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.நவனிதராஜா ,நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் , நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.பி.மனோஜ் இந்திரஜித், பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் நாவிதன்வெளி இணைப்பாளர் எம்.ஐ.எம்.பாரீஸ் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாடளாவிய ரீதியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப் பொருளில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வழங்குதல் நிகழ்ச்சி திட்டத்தில் கல்வியை பூர்த்தி செய்யாத 35இ000 பயிலுநர்கள் முதற்கட்டமாக நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்கள் இவற்றுள் அம்பாறை மாவட்டத்திலும் பயிலுநர்கள் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களிற்கான தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.
0 comments :
Post a Comment