மருதமுனையின் மூத்த கல்வி அதிகாரி மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் சேவையை தொடர்ந்து சமூகத்தின் நலனுக்க முன்னெடுக்கும் நோக்கத்தோடு அவர்களின் நினைவாக 'பழீல் மெளலானா பவுண்டேஷன்' அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(19.03.2021) மருதமுனையில் நடைபெற்றது. நிகழ்வின்போது அமைப்பின் உத்தியோகபூர்வ பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன.
பவுண்டேஷனின் தலைவர் எப்.எம். அமீருல் அன்சார் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி . இறக்காமம் பிரதேச செயலாளரும் முன்னாள் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம்.முகம்மட் நசீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்வின்போது பவுண்டேஷனின் தவிசாளர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாள் எப்.எம். அஹமது அன்சார் மெளலானா, சமூக சேவை உத்தியோகத்தர் மஹ்றூப் ஜெய்சான், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்தீன், செயலாளர் இம்திலா ஹாசன் உட்பட பழீல் மௌலானா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment