வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பாகுபாடுகள் இன்றி அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்பு செயலாளருமான எம். எம் மஹ்தி அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(07) கிண்ணியாவில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நகர சபை உறுப்பினர் மஹ்தி அவர்கள்
நாடளாவிய ரீதியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகள் இவ்வாறு காணப்படுகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து இப்பட்டதாரிகள் சிலருக்கு சென்ற வருடம் நியமனங்கள் வழங்கப்பட்டு சில வாரங்கள் பணிகளுக்கு சென்ற நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இடைநிறுத்தப் பட்ட சம்பவமும் மிக வேதனையானதாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமது கற்கை நெறிகளை நிறைவு செய்த இவர்களுக்கு இந்த அரசினால் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய அவர்களை ஏமாற்றாது பொருத்தமான நியமனங்களை வழங்க அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்
0 comments :
Post a Comment