ஊடகதர்மத்தைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பங்கு ஊடகத் துறையினருக்கும் உண்டு...

டகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற இன்றைய சூழ்நிலையிலே பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தையும் ஊடகங்களையும் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள் சமூகத்தினர் மட்டுமல்ல ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கின்றது'என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது அச்சுப்பத்திரிகையான கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் 'பரிமாணம்' அச்சுப்பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று(28) கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் ஸ்தாபகர் பு.கேதீஸ் தலைமையில் நடைபெற்றது.

பத்திரிகையின் பிரதமஆசிரியர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) இரா.சாணக்கியன் தவராசா கலையரசன் முசாரப் முதுநபீன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தவிசாளர்களான கே.ஜெயசிறில்(காரைதீவு) இ.வி.கமலராஜன்(திருக்கோவில்) அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் கிழக்குமாகாணசபையின் பேரவைச்செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் கல்முனைப்பிராந்தியசுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதல் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச்சங்கத்தலைவரும் பிரபல தொழிலதிபருமான எஸ்.ரஞ்சிதமூர்த்தி ஆசிரியபீட ஆலோசகர் கே.குணராசாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் 20பக்க முதல் பிரதி இலவசமாக வழங்கப்பட்டது.

சமயத்தலைவர்களான மட்டு.இ.கி.மிசன் உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவனானந்தா ஜீ மஹராஜ் கல்முனை சுபத்ராராமய விகாராதிபரி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் விரிவுரையாளர் மௌலவி அன்சார் மௌலானா வண.பிதா.அருட்பணி அ.தேவதாசன் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர்.
இதன்போது திரு.சுமந்திரன் மேலும் உரையாற்றுகையில்

வலைதளங்களில் இருக்கின்ற ஊடகங்களில் வருகின்ற செய்திகள் உடனுக்குடன் வருவதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை பற்றி பலருக்கும் கேள்விகள் இருக்கின்றது. ஒரு பொறுப்போடு செய்திகைளப் பிரசுரிக்கத் தேவையில்லை என்ற வகையில் இணையவளி செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அச்சுப் பதிப்பினாலே ஒரு ஊடகம் வெளிவருகின்ற போது அது சம்மந்தமான சட்டங்கள் எமது நாட்டில் ஊறிப்போயிருக்கின்ற காரணத்தினாலே எதையும் அச்சிட்டு பிரசுரித்துவிட முடியாது.

இன்றைய கால கட்டத்திலே ஊடகம் மிக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. இன்றைக்கு விசேடமாக இந்த அரசாங்கத்தின் கீழே துணிவோடு உண்மையை எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றது. ஊடக சுதந்திரம் திரும்பவும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் எப்படியாக இருந்தது என்று 2015ம் ஆண்டுக்கு முன்னர் எங்களுக்குத் தெரிந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். இன்னும் பலர் நாட்டை விட்டு ஓடினார்கள். இன்றைக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெருமையோடு சொல்லுகினற விடயம் அவருடைய காலத்தில் எந்த ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை என்பதாகும். அதை அவர் பெருமையாகச் சொல்லும் அளவிற்கு உண்மையும் இருக்கின்றது.

ஆனால் தற்போது நிலைமை மாறுகின்றது என்கின்ற ஒரு அச்சம் எழுந்துள்ளது. பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தைக் காத்து ஊடகங்களைப் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள்இ சமூகத்தினர் மட்டுமல்லஇ ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கின்றது. உண்மையானஇ சரியான செய்தியைச் சரியான கோணத்தோடு அதனை வெளியிடுகின்ற போது அந்த ஊடகத்திற்கும் அந்தச் செய்திக்கும் ஒரு மதிப்பு இருக்கும்.

எனவே ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற இந்தச் சூழ்நிலையிலே இன்று கல்முனை நெற் இணையத்தளத்தினால் வெளியிடப்படுகின்ற பரிமாணம் என்ற பத்திரிகையும் உண்மையான சரியான ஊடகதர்மத்திற்கு உகந்ததான செய்திகளை வெளியிடும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமரர் வேல்முருகு மாஸ்டரின் நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. அவரது பாரியார் சுடரேற்ற மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. அமரர் லே;முருகுவின் நினைவுரையை மூத்த அரசியல்பிரமுகர் கு.ஏகாம்பரம் நிகழ்த்தினார்.

மூத்த கவிஞர் வித்தகர் மு.சடாட்சரம் பொன்னாடைபோர்த்திக்கௌரவிக்கப்பட்டார். வாழும்போதே வாழ்த்துவோம் என்ற கல்முனைநெட்டின் செயற்பாட்டின் பிரகாரம் அவருடனான செவ்வி அடங்கிய இறுவட்டு ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :