அம்பாறை மாவட்டம் நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட அஸ்லம் சஜா இலங்கை கபடி அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 27.03.2021 தொடக்கம் 04.04.2021 வரை பங்களோதேஷத்தில் நடைபெறுகின்ற சர்வேதேச கபடி சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
இலங்கை கபடி கனிஷ்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி 2016ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 6வது ஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு வெண்கல பதக்கத்தை பெற்று தந்த இவர் பின்னர் 2017ம் ஆண்டில் இருந்து இலங்கை கடற்படை கபடி அணியில் இடம் பிடித்து தனது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டி வந்த இவர் 2018ம் ஆண்டு இலங்கை தேசிய கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டார் .
நிந்தவூர் அல்- மதினா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தற்போது அப் பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
இவர் கிழக்கு மாகாண கபடி அணியின் வீரரும் மதீனா விளையாட்டு கழகத்தின் கபடி அணி தலைவரும்,சிரேஷ்ட கபடி வீரரும் ஆவர்.அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் செயலாளரும்,மதீனா விளையாட்டு கழக செயலாளரும், ஆசிரியருமான எஸ்.இஸ்மத் இவை அனைத்துக்கும் பயிற்சிகளை வழங்கி வழிகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷத்தில் நடைபெறவுள்ள சர்வேதேச கபடி சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு மதீனா விளையாட்டு கழக நிர்வாகிகளும் ஏனைய கபடி துறையின் முன்னேற்றத்துக்கு உதவும் அனைத்து உள்ளங்களும் இவர் இலங்கை சார்பாக சிறந்த பெறுபேற்றை பெற வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment