நாட்டில் இனிமேல் 10 இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட வேன்கள், பஸ்கள் மற்றும் பிற மோட்டார் வாகனங்கள் அனைத்தும் பயணிகள் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுப் போக்குவரத்து பஸ்கள், அலுவலக பஸ்கள், பிற சேவை பஸ்கள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவை வேன்களின் ஓட்டுநர்கள், இந்தச் சிறப்புப் பயணிகள் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வாரப் பயிற்சிக்குப் பிறகு, "குறித்த ஓட்டுநர் பயணிகள் போக்குவரத்துக்குப் பொருத்தமானவர்" என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, தேசிய போக்குவரத்து ஆணையகத்தினால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment