அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின !

நூருல் ஹுதா உமர்-

ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று 28ம் திகதி கயிறு இழுத்தல் மற்றும் எல்ல போட்டி சுற்றுப் போட்டி நடைபெற்றது.

கழகங்களுக்கிடையிலான கயிர் இழுத்தல் இறுதி சுற்றுப்போட்டியில் நியூ ஸ்டார் இளைஞர் கழக அணியும் அல் நஜா இளைஞர் கழக அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் வெற்றிபெற்ற நியூ ஸ்டார் இளைஞர் கழக அணி மாவட்ட மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை அல் நஜா இளைஞர் கழகம் பெற்று கொண்டது.

அத்துடன் கழகங்களுக்கிடையிலான எல்ல இறுதி சுற்றுப்போட்டியில் அல் அக்ஸா இளைஞர் கழக அணியும் அரபாத் இளைஞர் கழக அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் வெற்றிபெற்ற அல் அரபாத் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் அல் அக்ஸா இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தினை  தக்கவைத்து கொண்டது.

இப்போட்டிகளுக்கு பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலி கலந்து கொண்டதுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அஸ்வத் அலி உட்பட மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :