பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது .

எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை இன்று(20)மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வனப் பகுதியை அழித்து வேறு தரப்பினருக்கு காணியை பகிர்ந்தளித்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் ஜயந்திபுர வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் 56 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வன பரிபாலன அதிகாரிகளிடம் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் வனப்பகுதி அழித்து அந்த காணிகளை பகிர்ந்தளித்துள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக விசாரித்த வன இலாக்கா அதிகாரிகளுக்கும் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,நாளைய தினம்(21) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :