எமது நாடு பெரும்பான்மை சிங்கள மக்களை அடிப்படையாக கொண்டும் சிங்கள மொழியினை பிரதான மொழியாக கொண்டும் காணப்படுகின்றது.அந்த வகையில் எமது அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் தொடக்கம் எதிர்கால இளைஞர்கள் வரை இரண்டாம் மொழிக்கல்வியை கட்டயமாகியத்தில் இருந்து எமது மொழி தேவையின் அவசியத்தை புரிந்து கொள்ளக் கூடியாத உள்ளது என தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட வளவாளரும்,ஆசிரிய ஆலோசகருமான சிறீஸ் கந்தராஜா குறிப்பிட்டார்.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்.உயர்மட்டக் குழு கல்முனைக்கு கடந்த வாரம் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்...
எமது தேசிய மொழிக் கல்வி நிறுவனம் பல்வேறுபட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது அந்தவகையில் அரச கரும மொழிகளில் செயலாற்றக் கூடிய பகிரங்க சேவை ஒன்றை உருவாக்குதல் , தற்போது நிலைபெற்றுள்ள அரசகரும மொழிக் கொள்கைகள் அது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அணுகுவதற்கு மக்களையும் பகிரங்க சேவையையும் வலுவூட்டல் மற்றும் மொழிகள் கருத்திட்டத்தை மேம்படுத்தல் தொடர்பில் இலங்கை மக்களிடத்தில் சாதகமான மனநிலையைப் ஏற்படுத்தல் மற்றும் மக்களுக்கு சேவையை வழங்கி மும்மொழி சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல் போன்ற பல நோக்கங்களை மையப்படுத்தி மக்களுக்காக செயலாற்றி வருகின்றது.
இருமொழிக் கற்கையின் அவசியம் எமது நாட்டில் தற்போது அதிகரித்துள்ளது.தேசிய ஒற்றுமையை வளத்தலும் இனங்களுக்கிடையே மத,மொழி கலாச்சார ரீதியான சகவாழ்வினை விருத்தி பெறச் செய்து புரிந்துணர்வை ஏற்படுத்தி எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு இரண்டாம் மொழிக்கல்வி அவசியாக திகழ்கின்றது என குறிப்பிட்டார்.
மொழியைக் கற்பதன் ஊடாக ஏனையவர்களின் இன,மத,கலாசார விழுமியங்களையும், பண்புகளையும் சேர்ந்து கற்று கொள்ளுவதனால் ஏனையவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவம் ஏற்படும். அப் பண்பு இயல்பாகவே மக்களிடத்தில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுதும் என்பது நிதர்தனமான விடயமாகும்.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் நாடுபூராகவும் தங்களது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற உறுதிவூண்டவர்கள். எனவே அதற்கு மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது மாறாது அது அவர்களின் வாழ்வில் ஒரு படிக்கல்லாக திகழ வேண்டும் அதற்காக வேண்டி எல்லோரும் உறுதி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
Attachments area
0 comments :
Post a Comment