கொஹுவல − ஆசிரி மாவத்தை பகுதியில் எரிந்த காரொன்றிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த சடலம் நேற்றிரவு 11.30 அளவில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
33 வயதான வர்த்தகர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரவு நேர உணவு உட்கொள்வதற்காக சென்று, மீண்டும் வீடு திரும்பிய நிலையிலேயே, இந்த சம்பவம் நேர்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொஹுவல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment